செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்… 100+ நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியம்… செம குஷியில் துள்ளும் விஜய்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது இபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் இணைந்த கையோடு அதிமுக மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதற்கான வேலைகளில் தற்போது அவர் இறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்த நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்க தீவிரம் காட்டி வருகின்றார். கட்சியில் இணைந்தது முதலே செங்கோட்டையன் அதிரடியில் இறங்கியுள்ளார்.

   

கோபி தொகுதியில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்தவர்களை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைப்பதில் அவர் முனைப்பு காட்டி வருகின்றார். இந்நிலையில் 100க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சித் தொண்டை அணிவித்து அவர் வரவேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவர் என செங்கோட்டையன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.