காலையிலேயே இபிஎஸ்க்கு ஷாக்…. திமுகவில் கூண்டோடு இணைந்த அதிமுகவின் கூட்டணி கட்சி… சம்பவம் செய்த ஆர்.எஸ் பாரதி…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாகவே பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். அரசியல் தலைவர்கள் உட்பட சினிமா பிரபலங்களையும் இணைக்கும் முயற்சியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் செல்வாக்கு மிக்க பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதேபோல விருப்பத்தின் அடிப்படையிலும் கட்சித் தாவும் படலம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தென்காசியை சேர்ந்த SDPI கட்சி நிர்வாகிகள் 100 பேர் ஆர் எஸ் பாரதி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னதாக கடந்த ஏப்ரலில் அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.