20 ஜிபி கூடுதல் டேட்டா.. JIO-வின் புதிய ரீசார்ஜ் திட்டம்.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

இந்தியாவின் முன்னணியின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அவ்வபோது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஜியோ நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருவதுதான்.

தற்போது ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் ஓடிடி தளங்களில் அதிக வீடியோக்களை பார்த்து மகிழலாம். இந்த திட்டம் 72 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பயனருக்கு கூடுதல் 20 ஜிபி டேட்டா கிடைக்கும். அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் பயனர்கள் ஜியோ டிவிக்கானஇலவச அணுகலையும் பெற முடியும்.