மக்களே..! பணத்தை இரட்டிப்பாக்கும் அருமையான திட்டம்… நீங்களும் ஜாயின் பண்ணி பணத்தை அள்ளுங்க..!!

By Soundarya on ஆனி 9, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்பது பெரும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமித்து வருகிறார்கள். இதற்கு ஏராளமான திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஒரு நல்ல திட்டமாகும். இத்திட்டத்தின் மூலமாக பணத்தை சேமித்தால் சுமார் 9 வருடங்கள் மற்றும் ஏழு மாதங்களில் பணம் இரட்டிப்பாகிறது. அதாவது முதலீடு வெறும் 115 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும். இந்த திட்டம் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும் திட்டம் என்பதால் இதில் நாம் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது. இந்த திட்டமானது தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தற்போது 7.5 சதவீத கூட்டு வட்டியை வழங்குகிறது.

குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் முதலீட்டை தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். ஒரு கணக்கை ஒற்றைக் கணக்காகவோ, கூட்டுக்கணக்காகவோ திறக்கலாம். பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் கூட கணக்கு திறந்து கொள்ளலாம்.  30 மாதங்களுக்கு பிறகு அதன் மீதான முதலீட்டையும் வட்டியையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் முழு வருமானம் பெறுவதற்கு 115 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை.