டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று மதியம் அவருடைய உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளார். பிறகு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை அவருடைய தந்தை பல இடங்களில் தேடிய போது நேரு விஹார் பகுதியில் காலனியில் வசிப்பவர்கள், நபர் ஒருவர் அவருடைய பிளாட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளனர். அந்த பிளாட்டின் உரிமையாளர் பூட்டின் சாவி சகோதரி இடம் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அந்த சிறுமி சூட்கேட்சில் ஆடைகள் களையப்பட்டு சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார்.
அந்த சிறுமி கொடூர முறையில் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அருகில் உள்ள மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அந்தரங்க பாகங்களில் தொடர்ந்து ரத்தம் வழிந்து உள்ளது. உடலின் வேறு பகுதிகளில் காயங்கள் எதுவும் தெரியவில்லை. உடனடியாக குழந்தையை உயர் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
