தமிழகத்தில் வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் கட்டுரை போட்டி நடத்த உள்ளதாக ஆளுநர் RN ரவி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரத்தின் பங்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டுரை எழுதி வருகின்ற ஜனவரி 31ம் தேதிக்குள் கவர்னர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 30,000 ரூபாய், மூன்றாம் பரிசு 25,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
