2 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம்…! இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

By Devi Ramu on மார்கழி 15, 2025

Spread the love

அரியலூருக்கு அருகில் நடந்த சாலை விபத்தில், திருமானூர் அஞ்சலக ஊழியராக பணியாற்றி வந்த ஜெனிபர் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உயிரிழந்த ஜெனிபருக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமண நிச்சயம் நடைபெற இருந்தது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை எதிர்பார்த்து அவர் தயாராகி வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்து அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நேரத்தில் அஞ்சலக ஊழியர் ஜெனிபர் விபத்தில் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.