அடுத்த அதிரடி… 2026 தேர்தலுக்காக விஜய் எடுத்த புதிய முடிவு… தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வருகை என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய அமைச்சர்களின் வருகையும் தொண்டர்களின் இணைவும் அதிகரித்து வருகிறது. அதன்படி அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். இவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தார்.

   

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சி செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வெற்றி தொலைக்காட்சி (Vettri TV) தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சேனலுக்கு ஆதவ் அர்ஜுனா நிதி வழங்க உள்ளதாகவும் அனுமதி பெறும் பணிகள் மற்றும் பிரபல ஊடகவியலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.