காஷ்மீரில் 150 நாள் ஷூட்டிங்… விஜய் செய்த செயலால் அதிர்ந்த போன படக்குழுவினர்… தீயாய் பரவும் தகவல்…

By Begam on ஐப்பசி 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை திரையுலகிற்கு கொடுத்தவர். தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை தற்பொழுது  இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

   

இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸாகி தளபதி ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது.  தற்பொழுது லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  இந்நிலையில் லியோ திரைப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டது. மைனஸ் டிகிரியில் கிட்டதட்ட 150 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் விஜய் லியோ படத்தின் பூஜை போட்ட போது எப்படி இருந்தாரோ அதே எடையில் கடைசி வரைக்கும் இருந்தாராம்.

   

 

இதற்காக தினமும் அவர் 40 நிமிடங்கள்  உடற்பயிற்சி செய்வாராம். அதோடு மட்டுமல்லாமல் இந்த 150 நாட்களும் ஒரே மாதிரியான உணவு முறையை தான் விஜய் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் சட்டையில்லாமல் நடிக்கும் காட்சிகள் எடுப்பதற்கு பத்து நாட்கள் முன்பு கூடுதலாக உடற்பயிற்சி செய்து ஆர்ம்ஸ் ஏற்றிக் கொள்வாராம். இப்படி தான் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் தளபதி.