திடீரென நாய் போன்று மாறிய 15 வயது சிறுவன்… மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நாய் கடித்த விபரத்தை பெற்றோரிடம் மறைத்த 15 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் சபரிவாசன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வெறிநாய் ஒன்றால் கடிக்கப்பட்டுள்ளார். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் தனக்கு நாய் கடித்ததை யாரிடமும் கூறாமல் அச்சிறுவன் மறைத்துள்ளார். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சபரிவாசனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதைக் கண்ட அவரது தந்தை, உடனடியாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு தலைக்கு ஏறிவிட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நாய் போன்றே செயல்படத் தொடங்கிய அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடி போன்ற பாதிப்புகளைக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வுடன் கையாள வேண்டும் என்பதை இச்சம்பவம் ஒரு பாடமாக உணர்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

10 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

10 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

10 மணத்தியாலங்கள் ago