முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, உளவுத்துறை (Intelligence) தலைவராக (IG) அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிங்கப்பெண் சிறப்புப் படை டிஜிபியாக (DGP) பவானீஸ்வரி ஐபிஎஸ் அவர்களும், சிவில் சப்ளைஸ் சிஐடி (Civil Supplies CID) டிஜிபியாக வெங்கட்ராமன் அவர்களும் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முக்கியப் பணியிட மாற்றத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த பல்வேறு மாவட்டங்களுக்கும் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்குப் புதிய எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாக ரீதியான அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
