ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்ப்கார் பகுதியில் உள்ள ஒரு 14 வயது மாணவன் சில இளைஞர்களின் மிரட்டலுக்கு பலியாகி வீட்டிலிருந்த கோடிக்கணக்கான பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பகத்சிங் காலனியில் வசித்து வரும் மாணவன் தன்னுடைய பெற்றோர்கள் இறந்த பிறகு மாமா ராஜ்பால் ஷர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த மே மாதம் ராஜ்பால் அலமாரியில் வைத்திருந்த 35 லட்சம் ரூபாய் பணம் திடீரென காணாமல் போனது தெரியவந்துள்ளது. பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் மாணவன் பள்ளியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு பிறகு இரண்டு இளைஞர்கள் அவனை மிரட்டி பணம் கேட்டது தெரியவந்துள்ளது. முதலில் மிரட்டலுக்கு பயந்து 20000 ரூபாய் பணத்தை கொடுத்த மாணவன் மீண்டும் இளைஞர்கள் தொடர்ந்து மிரட்டி கேட்டதால் அச்சமடைந்து மூன்று லட்சம், பிறகு இரண்டு லட்சம், மூன்று லட்சம் என தொடர்ந்து அலமாரியில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளான். இறுதியாக ஒரு லட்சம் ரூபாயை எடுத்துச் செல்லும்போது மற்றொரு இளைஞர் அவனை வழியில் மிரட்டி 50000 ரூபாய் பணத்தை பதித்துள்ளார்.
மொத்தமாக மாணவனிடம் இருந்து இளைஞர்கள் சேர்ந்து 35.5 லட்சம் பணத்தை பறித்தனர். இதில் ஒருவன் 26 லட்சமும் மற்றொரு இளைஞன் ஒன்பது லட்சமும் பெற்றனர். ராஜ் பால் சர்மா போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிறுவர்களை குறி வைத்து நடக்கும் குற்ற செயல்கள் குறித்து சமூகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…
தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…
சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…