கர்நாடக மாநிலம் பெலகாவி தாலுக்கா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகின்றார். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி தனது வீட்டிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு அரவை ஆலைக்கு மாவு அரைப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் வந்தனர். அவர்கள் சிறிது தூரம் சிறுமியை பின்தொடர்ந்து சென்றனர். பிறகு சிறுமி கிராமத்தின் வெளிப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தின் அருகே சென்றபோது பின் தொடர்ந்து வந்த இரண்டு பேரும் திடீரென்று சிறுமியை வாயை பொத்தி கரும்பு தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து சிறுமியை இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
பிறகு அவர்களிடம் இருந்து தப்பிச்சென்ற சிறுமி இது பற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதனிடையே குடும்பத்திற்கு கொலைமிரட்டல் வந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் உடனே போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் கூட்டு பலாத்காரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது
