டிட்வா புயல் தாக்கம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதன்படி திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளன. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளுவராகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கையாக கடைசி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
