காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம். சில மணி நேரங்களில் முற்றிலுமாக கரையைக் கடந்து விடும். சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை கடந்து செல்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
