மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரா என்ற 45 வயது நபர், ஆஷா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்துத் தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ஆஷா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால், ஆத்திரமடைந்த மதுரா அவரை மிரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று ஆஷா வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த அவரது மகன் சிவாஜியை மதுரா கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த சிறுவனின் உடலை வீட்டிலிருந்த ஒரு நீல நிற டிரம்மிற்குள் மறைத்து வைத்துவிட்டு மதுரா தப்பியோடிவிட்டார். வெளியில் சென்றிருந்த சிறுவனின் சகோதரி வீடு திரும்பியபோது, கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, டிரம்மிற்குள் சிறுவனின் சடலமும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றவாளி மதுராவைத் தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், செல்போன் சிக்னல் உதவியுடன் இறுதியில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
