உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வழக்கறிஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் வைபவ் ஷா(17) என்ற மகன் உள்ளனர். இவரப் பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே நன்றாக படித்தால் பைக் வாங்கி தருவதாக மகனிடம் தந்தை கூறியுள்ளார். அதன்படி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மகன் தன்னுடைய 17ஆவது பிறந்தநாளை கொண்டாடிய போது பிறந்தநாள் பரிசாக தந்தை புல்லட் பைக் பரிசளித்துள்ளார். அந்த புல்லட் பைக்கை மகன அடிக்கடி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுவன் காலை 7 மணி அளவில் தன்னுடைய நண்பனுடன் புல்லட் பைக்கில் சென்றுள்ளார்.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் எதிரே வந்த ஆம்னி பேருந்து சிறுவன் ஓட்டி வந்த புல்லட் மீது மோதியதில் புல்லட்டில் இருந்த சிறுவன் மற்றும் அவருடைய நண்பன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் நண்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பா கொடுத்த பிறந்தநாள் பரிசே மகனுக்கு எமனாக மாறியது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு…
பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு ரம்மியமான உல்லாச விடுதிக்குச் சுற்றுலா சென்ற ஐந்து நண்பர்கள் கொண்ட…
சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு…
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…