BREAKING: அதிரடி நீக்கம்.. அரசு பரபரப்பு அறிவிப்பு…. சற்றுமுன் அதிர்ச்சி…!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் நிர்மாணத்தில் ஏற்பட்ட கட்டுமானக் குறைபாடுகள் காரணமாக 11 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் குறித்த அறிக்கையில் இத்தகவலைப் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தரமற்ற முறையில் பணிகளை மேற்கொள்ளும் மற்றும் தவறு இழைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான அபராதமும் கடும் நடவடிக்கைகளும் பாயும் என எச்சரித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் தரம் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதோடு, எதிர்காலத்தில் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் உயர்தரக் கட்டுப்பாடுகளுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்தப்படும் என்பதையும் மத்திய அரசு இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.