பள்ளிச் சீருடையிலேயே பிரசவம்… கழிவறையிலிருந்து கேட்ட குழந்தையின் அழுகுரல்.. ஓடிச் சென்ற ஆசிரியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கழிவறையிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி கழிவறைக்குச் சென்ற அந்த மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பள்ளி ஊழியர்கள் மற்றும் சக மாணவிகள் அங்கு சென்று பார்த்தபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவியும் குழந்தையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவி சுமார் 34 வாரங்கள் (எட்டு மாதங்கள்) கர்ப்பமாக இருந்ததும், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்திருப்பதும் தெரியவந்தது. பள்ளிச் சீருடையிலேயே மாணவி குழந்தை பெற்றெடுத்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த முறை ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஒரு மாணவனுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், இது குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அந்த மாணவன் மிரட்டியதும் தெரியவந்தது. தற்போது போலீசார் இச்சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

4 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

22 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

27 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

31 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

48 minutes ago