கர்நாடகாவின் கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணை தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காவிரி ஆற்றின் கரையோரம் வசசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு முகாம்களுக்கு மாறுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
