மின்சாரத் துறையின் தொடர் வருவாய் இழப்பைக் குறைக்கும் நோக்கில், தொடர்ந்து 90 நாள்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான மின் மீட்டர்களை உடனடியாக அகற்றுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தத் துண்டிப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு முன்னெச்சரிக்கை ‘எஸ்.எம்.எஸ்’ அலர்ட் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தொழில் மற்றும் பணி நிமித்தமாகப் பல மாதங்கள் வெளியூர்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ தங்கி வாழும் குடும்பங்களுக்கும், பூட்டியே கிடக்கும் சொந்த வீடுகளைக் கொண்டவர்களுக்கும் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் சிரமத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
