மனசாட்சியே இல்லையா…? துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி… குற்றவாளிகள் தண்டனையின்றி திரிவதாக வெடித்த சர்ச்சை… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள பிரபல ஹவேலியில் 10 வயது சிறுமி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தண்டனையின்றித் திரிவதாகச் சமூக வலைதளங்களில் மீண்டும் வலுவான எதிர்ப்புக் குரல்கள் வெடித்துள்ளன.

பாகிஸ்தான் சிந்த் மாநிலம் கைர்பூரில் உள்ள ராணிபூர் பகுதியில் ‘பீர் அசாத் ஷா ஜிலானி’ என்பவரது வீட்டில் வேலை செய்து வந்த 10 வயது சிறுமி பாத்திமா ஃபரூக், கடந்த காலத்தில் கொடூரமான உடல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

   

இச்சம்பவத்தில் அசாத் ஷா, ஹீனா ஷா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போதிலும், ஆளும் ‘பாகிஸ்தான் மக்கள் கட்சி’ ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர்கள் தண்டனையின்றித் தப்பித்து சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அப்பாவிச் சிறுமியின் கொலைக்கு இன்னும் உரிய நீதி கிடைக்கவில்லை எனக் கூறிச் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் மக்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் மீண்டும் கடுமையான போராட்டக் குரல்களைப் பதிவிட்டு வருவதால் இச்செய்தி இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.