“உணவின்றி, கைகள் கட்டப்பட்டு கதறிய சிறுவன்…” சகோதரர்கள் கட்டியதாக பொய் சொன்ன தாய்…. எப்போதும் இதே வேலைதானா…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

குவாத்தமாலாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சிறுவன் ஒருவன் தொடர்ச்சியாக இடைவிடாமல் அழுதுகொண்டிருந்த சத்தம் கேட்டு அண்டை வீட்டார் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒரு வீட்டின் முற்றத்தில் சிறுவன் ஒருவன் வெறுங்காலுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் வாடி கதறி அழுதுகொண்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாகச் செயல்பட்ட அண்டை வீட்டார் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் கட்டுகளை அவிழ்த்து, உணவும் தண்ணீரும் வழங்கி அவனை அரவணைத்து மீட்டனர். விசாரணையில், சிறுவனின் தாய் மோரா (25) தனது குழந்தைகள் விளையாடும்போது சகோதரர்கள் தான் இப்படிச் செய்ததாகப் பொய் கூறியுள்ளார்.

   

ஆனால் அவரது பொய் அம்பலமானதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாகவே பலமுறை குழந்தைகளைப் பராமரிக்கத் தவறியதற்காக அவர் மீது புகார்கள் எழுந்த போதிலும், நீதிமன்றம் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்ததே இந்த நிலைமைக்குக் காரணம் எனக் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.