சாலையில் நடந்து சென்ற சிறுமியை வாயை மூடி தூக்கிச் சென்று வன்கொடுமை.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் நடந்து சென்ற சிறுமையை வாயை மூடி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் 10 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் வாயை மூடி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழகத்தையே உலுக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கடந்தும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வரும் நிலையில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.

அதில், சிறுமி என்றும் பாராமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இது போன்ற குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவுகிறார்கள் என்பதே சமுதாயம் எத்தனை ஆபத்தான சூழலில் உள்ளது என்பதை காட்டுகின்றது. இத்தனை தைரியமாக சாலையில் நடந்து செல்லும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றவாளி இதற்கு முன்பாக எத்தனை முறை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பான் என்ற கேள்வி எழுவது மட்டுமல்லாமல் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது மேலும் குற்றங்களில் அவன் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது . காவல்துறை இனியும் தாமதிக்காமல் உடனடியாக இந்த குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

 

Nanthini

Recent Posts

“எவன் கூட டீ கள்ளத்தொடர்பு?”…. விஷம் குடிக்க மறுத்த மனைவி… கதறிய 3 வயது குழந்தை…. பழனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!

குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…

8 minutes ago

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

15 minutes ago

BREAKING: அதிமுகவில் மேலும் 5 பேர் ராஜினாமா செய்தனர்…. EPS-ஐ அதிரவைத்த மாஜி அமைச்சர்களின் மூவ்…. உச்சக்கட்ட பரபரப்பு….!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…

21 minutes ago

வைகோ சொன்ன ‘அந்த’ ரகசியம்.. திமுகவின் அடுத்த மூவ்…. தவெக-வை வீழ்த்த ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்கு… அம்பலமான அரசியல் வியூகம்….!

தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…

29 minutes ago

“பதவியும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்”…. EPS முகத்தில் காகிதத்தை எறிந்த 9 மூத்த தலைவர்கள்… கதிகலங்கிப் போன எடப்பாடி…. விடிய விடிய நடந்த சதி….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…

36 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

1 மணத்தியாலம் ago