“ஐயோ என் புள்ள போச்சே”… கழிவறையில் சுடச்சுட வெந்நீர் வைத்த தாய்… கண்ணிமைக்கும் நொடியில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் விஜயகிரி கிராமத்தை சேர்ந்த பசப்பா என்பவருடைய மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக ரம்யா வெந்நீர் வைத்த நிலையில் தண்ணீர் மிகவும் சூடாக இருந்துள்ளது. இதனால் கொதிக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை ரம்யா கழிவறை அருகே வைத்துவிட்டு வீட்டுக்குள் துண்டு எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வெண்ணீர் இருந்த பாத்திரத்தின் அருகில் வந்துள்ளது.

இதனை ரம்யா கவனிக்காத நிலையில் பாத்திரத்தை பிடித்து எழுந்த அந்த குழந்தை எதிர்பாராத விதமாக வெண்ணீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்ததால் உள்ளே விழுந்ததும் உடல் வெந்து குழந்தையை கதறி அழுதது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா ஓடி வந்து வெந்நீரில் விழுந்து கிடந்த குழந்தையை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

44 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

54 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago