அடேங்கப்பா..! “வீட்டு வேலை செய்ய 1 லட்சம் சம்பளம்” வேலைக்கார பெண்ணுக்கு House Manager பதவியும் கூட… இணையத்தையே வியக்க வைத்த இந்த தம்பதி யார்..??

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

‘Graylabs’ எனும் AI நிறுவனத்தின் CEO-வான அமன் கோயல் என்பவர் தன்னுடைய வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் பணியாளருக்கு ரூ.1 லட்சம்ரூபாய் சம்பளம் தருவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அமன் கோயல் மற்றும் அவர் மனைவி இருவருமே ஐஐடியில் படித்தவர்கள். ஐடி துறையில் தனி நிறுவனத்தை தொடங்கி அவர்கள் பிஸியாக இருப்பதால், படித்த பெண் ஒருவரை வீட்டு வேலைக்கு நியமித்து அவருக்கு House Manager என பதவியையும் குடுத்து, மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தையும் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அமன் கோயல் கூறுகையில், உண்மையில் நான் ஒரு வீட்டு மேலாளரை வேலைக்கு அமர்த்தினேன், அவர் உணவு திட்டமிடல், அலமாரிகள், பழுதுபார்ப்பு, பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், சலவை போன்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் ஒரு முழுநேர நபர். அடிப்படையில், அவர் அனைத்து வீட்டு உதவி மற்றும் சேவை வழங்குநர்களையும் நிர்வகித்து எங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறார். மனைவி ஹர்ஷிதாவும் நானும் வேலை செய்யும் தொழில் வல்லுநர்கள், இதற்கு எங்களுக்கு நேரமில்லை என்பதால் இது எங்களுக்குத் தேவைப்பட்டது. எங்கள் முழு ஆற்றலும் கிரே லேப்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறோம்,” என்று அவர் விளக்கினார்.