“ஐயோ கடவுளே… 3-வது மாடி பால்கனியில் இருந்து… கீழே விழுந்த 1.5 வயது பிஞ்சு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!”

By Swetha on ஆவணி 17, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிக்கா டுகொடி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 1.5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று மதியம் பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குழந்தை பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பால்கனியின் தடுப்பைத் தாண்டி 3-வது மாடியில் இருந்து குழந்தை திடீரென கீழே சாலையில் விழுந்தது.

குழந்தை கீழே விழுவதைக் கண்ட அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று குழந்தையை மீட்டனர். கை, தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

குழந்தை 3-வது மாடியில் இருந்து கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர விபத்து சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.