புதையல் எடுப்பதற்காக குடும்பத்தினருடன் சுரங்கம் தோண்டிய நபரால் நடந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!

Spread the love

தமிழகத்தில் புதையல் எடுக்க சென்ற ஒரே குடும்பத்தினரில் இரண்டு பேர் உ.யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது மகன்களான சிவவேலன், சிவமாலை ஆகியோருடன் ஒரே வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது வீட்டுக்கு பின்புறம் இருக்கும் காலி மனையில் புதையல் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பிய முத்தையா குடும்பத்தினர் ஊர் மக்களுக்கு தெரியாமல் வீட்டின் பின்புற புதையலை தேடி சுரங்கம் தோண்ட ஆரம்பித்துள்ளார். 50 அடிக்கு மேல் ரகசியமாக சுரங்கம் தோண்டியுள்ளனர். அதன் படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முத்தையா குடும்பத்தினருடன் மேலும் இருவர் ரகுபதி, நிர்மல் இருவரும் இணைந்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று மாலை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக முத்தையாவின் மருமகள் சுரங்கம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு ஒருவிதமான வாசணை வருவதை உணர்ந்த அவர், சுரங்கம் அருகில் செல்ல முயன்ற போது, அவருக்கு மயக்கம் ஏற்படுவது போல் இருந்துள்ளது. இதனால் உடனடியாக அங்கிருந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.

இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அங்கு விரைந்துள்ளனர், அப்போது அங்கு பொலிசார் நடத்திய வி.சாரணையில்,புதையலுக்கு ஆசைப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டதை முத்தையா குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுரங்கத்தில் இருந்து விஷவாயு வெளியேறுவதை உறுதிசெய்தனர். நீண்ட நேர போ.ராட்டத்துக்கு பின்னர் சுரங்கத்தில் இருந்த 4 பேரையும் மீட்டனர்.

சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகுபதி, நிர்மல் உயிரிழந்தனர். சிவவேலன், சிவமாலை இருவரும் உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக முத்தையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Archana

Recent Posts

BREAKING : சட்டமன்றத்தில் பரபரப்பு…. “அவர் செஞ்சது தவறுதான்”….. உதயநிதியிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ரஞ்சித்குமார் பேசுகையில் மறைந்த…

7 minutes ago

காதலனுக்கு விபூதி…!” அவன் வேண்டாம்… நண்பன் தான் வேணும்…” நள்ளிரவில் ஒரே வீட்டில் 3 பேர்…. கயிற்றால் கட்டி போட்ட மக்கள்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைக் காண்பதற்காக அவருடைய காதலன் தனது நண்பனையும் உடன் அழைத்து வந்துள்ளார். இவர்கள்…

8 minutes ago

திக்.. திக்.. நிமிடங்கள்..! நள்ளிரவில் உயர்ந்த நீர்மட்டம்… பள்ளியில் சிக்கிய 150 பிஞ்சுகள்… தண்ணீரில் மிதக்கும் ஒடிசா கிராமம்…!!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிராமணி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகத்…

11 minutes ago

#BREAKING: முழு கடனும் தள்ளுபடி… இனி ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்…. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான…

12 minutes ago

விபத்து என நாடகமாடிய BSF வீரர்… மனைவியின் உடலில் இருந்த காயங்கள் காட்டிய உண்மை… 12 ஆண்டு திருமண வாழ்க்கையில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் அதிரடி கைது…!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…

21 minutes ago