Connect with us

Tamizhanmedia.net

சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டன்! புல்லரிக்கும் சிங்கப்பெண்ணின் பின்னணி

NEWS

சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டன்! புல்லரிக்கும் சிங்கப்பெண்ணின் பின்னணி

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை இந்தியாவில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது.

இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷ்யா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது. இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, ஏப்ரல் 5 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடனும், ஏப்ரல் 8 ஆம் தேதி, பெலாரஸ் அணியுடனும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கிறது.

இந்த இரு ஆட்டங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக இந்துமதி விளையாடி வருகிறார். இதுவரை 34 போட்டியில், 12 கோல் அடித்துள்ளார்.

அவர் தற்போது தமிழக காவல் துறையில் ‘சப்-இன்ஸ்பெக்டராக’ பணியாற்றி வருகிறார். இதேவேளை, கடலூரிலுள்ள மஞ்சகுப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி கதிரேசன் என்பவரின் மகள்தான் இந்துமதி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top