Connect with us

இளையராஜாவின் ரெக்கார்டிங் அறைக்குள் சென்று எப்படி பாடவேண்டும் என்று எஸ் ஜானகிக்கு சொல்லிக் கொடுத்த இயக்குனர்… யார் தெரியுமா?

CINEMA

இளையராஜாவின் ரெக்கார்டிங் அறைக்குள் சென்று எப்படி பாடவேண்டும் என்று எஸ் ஜானகிக்கு சொல்லிக் கொடுத்த இயக்குனர்… யார் தெரியுமா?

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். அவரின் பயோபிக் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளது. அந்த படத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜா தன்னுடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார். தான் எழுதியிருக்கும் ஒரு நோட்டைக் கூட மாற்றி வாசிக்க அவர் இசைக் கலைஞர்களை விட்டதில்லை. அதே போல பாடகர்களும் அவர் என்ன சொல்லித் தருகிறாரோ அதை அப்படியே பாடவேண்டும். இதில் எஸ் பி பாலசுப்ரமண்யம் மட்டும் கொஞ்சம் சலுகை எடுத்துக் கொள்வார்.

   

மொத்தத்தில் தன்னுடைய இசையைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு சர்வாதிகாரி என்றே சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட இளையராஜாவின் ஒரு ரெக்கார்டிங்கின் போது ரெக்கார்டிங் அறைக்குள் சென்று பாடகர் எஸ் ஜானகி அவர்களிடம் இந்த பாடலை எப்படி பாடவேண்டும், இந்த பாடலைப் பாடும் கதாபாத்திரத்தின் குணாம்சம் என்ன என்றெல்லாம் ஒரு இயக்குனர் விளக்கிவிட்டு வந்தாராம்.

 

அவர் வேறு யாருமில்லை. இளையராஜாவின் நெருங்கிய நண்பரான மகேந்திரன்தான். ஜானி படத்துக்காக காற்றில் எந்தன் கீதம் பாடலைப் பாடிய எஸ் ஜானகியிடம் மகேந்திரன் சில மாற்றங்களை சொல்லியுள்ளார். அவர் சொன்ன கருத்துகள் எல்லாம் சரியென்று தோன்றியதால் இளையராஜாவும் அவரை கோபித்துக் கொள்ளவில்லையாம்.

Continue Reading
To Top