அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… கைகால் முடியாத Zomato ஊழியரை… மொட்டை மாடிக்கு வரவைத்து கொடுமை… பார்சலை வாங்கும் நேரத்தில் வாடிக்கையாளர் எடுத்த முடிவு… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

ஒரு Zomato டெலிவரி ஊழியர் இரு கால்களாலும் நடக்க முடியாத நிலையில் பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக அவர் வாடிக்கையாளர்களை வீட்டின் வெளியே வந்து பார்சலை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொள்வார். ஆனால் ஒருமுறை, ஒரு நபர் தன் வீட்டின் மொட்டை மாடி வரை வந்துதான் பார்சலைத் தர வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்கிறார். போனில் பேசும் டெலிவரி ஊழியர், தம்மால் நடக்க முடியாது என்ற சூழ்நிலையை விளக்கி கீழே வருமாறு பணிவோடு கேட்டுக்கொண்டும், அந்த வாடிக்கையாளர் இறங்கி வர மறுத்துவிடுகிறார்.

வேறு வழியின்றி, அந்த டெலிவரி ஊழியர் மிகுந்த சிரமப்பட்டு மொட்டை மாடி வரை ஏறிச் செல்கிறார். ஆனால், அவர் பார்சலை அவர்களிடம் ஒப்படைக்கச் செல்லும்போது, “நீங்கள் வர மிக தாமதமாகிவிட்டது, அதனால் இந்த ஆர்டரை ரத்து செய்கிறோம்; இனி பார்சல் தேவையில்லை” என்று கூறி அந்த நபர் அதை நிராகரிக்கிறார். இத்தனை சிரமத்திற்கு நடுவிலும் அந்த ஊழியரின் முயற்சி வீணடிக்கப்பட்டு அவமதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

   

உண்மையில், அவருடன் வந்த வீடியோ எடுப்பவர் நினைத்திருந்தால் அவரே முன்னதாகச் சென்று அந்தப் பார்சலைத் தந்திருக்க முடியும். ஆனால், மனிதர்களின் கட்டாயத்தையும் சூழ்நிலையையும் பிறர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிறரின் இயலாமையை மதித்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும்போதுதான் சமூகத்தில் மனிதநேயம் நிலைத்து நிற்கும் என்ற உயரிய கருத்தை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.