கவுன்சிலர் சீட் வேணுமா?…. ரூ.20 லட்சம் ரெடியா?…. தவெக மா.செ-க்களின் ‘ரகசிய வசூல் வேட்டை’ அம்பலம்… செம அப்செட்டான முதல்வர் விஜய்….!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் கவுன்சிலர் சீட் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண வசூலில் ஈடுபட்டு வருவதாகப் பிரபல வார இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார்டு மற்றும் பகுதிகளின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல் நடைபெறும் இந்த ‘சீட் விற்பனை’ விவகாரம், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

பணம் கொடுத்தும் சீட் கிடைக்காமல் ஏமாறும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் மா.செ.க்களுடன் நடத்திய உரையாடல்களின் ஆடியோக்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகக் கட்சிக்குள் தீவிர உள்கட்சி மோதல் வெடிக்கும் என்றும், அது தவெகவின் அரசியல் பிம்பத்திற்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் உளவுத்துறை அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியலை முன்வைத்துக் களம் இறங்கியுள்ள தவெக-விற்குள், தேர்தலுக்கு முன்பே எழுந்துள்ள இந்த வசூல் புகார் அக்கட்சியின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.