இருசக்கர வாகனத்தில் சென்று தானே உணவு டெலிவரி செய்த Zomato CEO.. இறுதியில் அதனால் ஏற்பட்ட விளைவு..!

By Nanthini on ஐப்பசி 11, 2024

Spread the love

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான zomato CEO, தீபிந்தர் கோயல், தனது ஊழியர்களைப் போல மனைவியுடன் சேர்ந்து டெலிவரி பணியில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள ஆம்புலன்ஸ் மாலில் செயல்பட்டு வரும் ஹோட்டலில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரிக்காக பிக்கப் செய்ய சென்று உள்ளார். Zomato ஊழியர்களின் சீருடை அணிந்தபடி அந்த மாலியின் பிரதான நுழைவு வாயிலுக்கு சென்று அவரை அங்கிருந்த பணியாளர்கள் மாற்று பாதையில் வருமாறு கூறியுள்ளனர்.

   

அதன் பிறகு மற்றொரு நுழைவு வாயிலுக்கு சென்ற போது படிக்கட்டில் ஏறி செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்றாவது மாடிக்கு சென்ற அவர் அந்த ஹோட்டலின் முன் காக்க வைக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த சக ஊழியர்களுடன் கலகலப்பாக பேசி குறைகளையும் நிறைகளையும் கேட்டறிந்தார். பல மணி நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக உணவு ஆர்டரை அங்கிருந்து வாங்கிச் சென்றார்.

   

 

உணவுகளை பிக்கப் செய்ய செல்லும் சோமேட்டோ ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதை உணர்ந்த அவர் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை மதிக்குமாறு ஆம்பியன்ஸ் மால் உட்பட அனைத்து மால் நிர்வாகங்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட நாள் நிர்வாகம் உணவு பிக் அப் செய்ய வரும் ஊழியர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கித் தருமாறு உறுதியளித்தது. அதற்கு தீபிந்தர் கோயல் நன்றி தெரிவித்துள்ளார்.