சின்னத்திரை நடிகை ரேஷ்மாவிற்கு வந்த சிக்கல்… ஜீ தமிழ் சேனல் எடுத்த திடீர் முடிவால் வருத்தத்தில் ரசிகர்கள்..!

By Soundarya on தை 17, 2025

Spread the love

சினிமா பார்ப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும் சீரியல்கள் பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே  உள்ளது. சமீப காலமாக அதிக அளவில் சீரியல் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே தான் சன் டிவி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்த்து ஏழு நாட்களும் ஒளிபரப்பி வருகிறது. வெள்ளித்திரை ஹீரோயின்கள் கூட திரைப்பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்ன திரையில் நடிக்க தொடங்கி விடுகிறார்கள்.

   

அதேபோல சீரியலில் நடிக்கும் ஹீரோயின்களும் சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையை கைப்பற்றுவதிலும் ஆர்வத்தை காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சீரியல் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்த சீரியலில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்கிறார் . இவருக்கு ஜோடியாக விஜய் டிவி கிழக்கு வாசல் தொடரில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மா நடித்து வந்தார்.

   

 

ஹிந்தி சீரியல் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததாலும், இன்னும் ஒரு சில காரணங்களுக்காகவும் இந்த சீரியலை அந்த சேனல் முடிவுக்கு கொண்டு வரவுள்ளது . சீரியல் தொடங்கி ஆறு மாதத்தில் சீரியல் முடிவடை உள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . ஆனால் நடிகர் ஜெய் ஆகாஷ்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சின்னத்திரை பக்கம் உள்ளது. அவர்கள் மிகவும் வருத்தத்தோடு ஏன் இந்த திடீர் முடிவு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.