நான் 100 கோடி நாயகன் தல… அஜித்துடன் மோத தயரான பிரதீப் பிரதீப் ரங்கநாதன்… பயந்து ஓடிய அல்லு சில்லுகள்..!

By Soundarya on தை 17, 2025

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

   

இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த படக்குழு அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளி போவதாக தயாரிப்பு நிறுவனம்அறிவித்தது.  இந்த செய்தியை ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

 

இப்படியான நிலையில் பிப்ரவரி 6 வியாழக்கிழமை விடாமுயற்சி ரிலீஸ் ஆவதால் அதற்கு அடுத்த வாரம் பிப்ரவரி 14 காதலர் தினத்தை குறிவைத்து படங்கள் ரிலீஸ் ஆக இருந்தது. இப்போது அந்தப் படங்கள் எல்லாம் அடுத்தடுத்த வாரங்களுக்கு தள்ளி போகிறது. தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ், விடாமுயற்சியை வெளியிடுவதால் பெரும்பாலான தியேட்டர்கள் அதுக்கு தான் கிடைக்கும் என்பதால் சின்ன படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரிலீசாக இருந்த  சில படங்கள் தள்ளி போனாலும் பிரதீப் ரங்கநாதன் படம் ஒன்று மட்டும் ரிலீசாக உள்ளது.  இந்த படம் மட்டும் திட்டமிட்டபடி பிப்ரவரி 14 ரிலீசாக உள்ளது. பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான படம் டிராகன் படம் தான்  காதலர் தினத்துக்கு வருகிறது.