இசைஞானி இளையராஜாவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் இருந்து கார்த்திக் ராஜா, பவதாரணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தனர். இதில் கார்த்திக் ராஜாவுக்கு எல்லா திறமைகளும் இருந்தும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக வரமுடியவில்லை. பவதாரணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளார்.
ஆனால் இளையராஜாவின் வழியில் வெற்றிகரமான இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் அவரின் கடைசி மகனான யுவன் ஷங்கர் ராஜாதான். அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், தற்போது கோட் படம் வரை நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

#image_title
யுவனின் திரை வாழ்க்கையில் அவரோடு பல படங்களில் இணைந்து பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் மறைந்த பாடல் ஆசிரியர் நா முத்துகுமார். அவர்கள் இணைந்து பணிபுரிந்த 7 ஜி ரெயின்போ காலணி, கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன்.
இந்நிலையில் நா முத்துகுமாரோடு பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்த யுவன் “முத்துக்குமாருக்கு காசினோ செல்வது பிடிக்கும். அதற்காக பாடல் கம்போஸ் செய்யவேண்டும் என வெளிநாட்டுக்கு போகவேண்டுன் என அடம்பிடித்தார். நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு அவருக்கு மட்டும் டிக்கட் போட்டு அனுப்பிவைத்தேன். அந்தளவுக்கு நாங்கள் நெருக்கம் நாங்கள்.

#image_title
முத்துக்குமார் எந்த வரிகள் முதலில் தோன்றினாலும் எனக்குதான் போன் செய்து சொல்வார். அப்படிதான் “ஒரு பாதி கதவு நீயடி.. மறுபாதி கதவு நீயடி” வரிகளை என்னிடம் சொன்னார். ஆனால் அப்போது அந்த வரிகளைப் பயன்படுத்த சரியான பாடல் அமையவில்லை. பின்னர்தான் அது ஜிவி இசையில் தாண்டவம் படத்தில் வந்தது.” என்க கூறியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவும் முத்துகுமாரும் ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
