சினிமாவில் ஒழுக்கமான நடிகைன்னா இவங்கதான்.. பயில்வான் கொடுத்த சர்டிபிகேட் யாருக்கு தெரியுமா…?

By admin on ஐப்பசி 16, 2024

Spread the love

சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் பற்றி கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார். ஆனால் முதல் முறையாக அவர் ஒரு நடிகையை புகழ்ந்து பேசி உள்ளார். அது யார் என்றால் நடிகை சுவலட்சுமி. கவர்ச்சியாக நடித்தால் தான் பட வாய்ப்பு வரும் என்ற எண்ணத்தை மாறியவர்கள் நடிகை சாவித்திரி, தேவிகா, பத்மினி.

   

அதேபோல நதியாவிற்கு அடுத்து கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தவர் சுவலட்சுமி. அவர் பெரும்பாலான படங்களில் சேலை கட்டி தான் நடித்தார். பல நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசினார்கள். ஆனாலும் அதில் சிக்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். நடிகர் கார்த்திக் உடன் கோகுலத்தில் சீதை திரைப்படத்தில் சுவலட்சுமி நடித்தார்.

   

 

அப்போது கார்த்திக் சுவலட்சுமிக்கு பல ரூட் போட்டார். ஆனால் சுவலட்சுமி அதில் சிக்கவே இல்லை. காதலுக்கு நோ சொல்லி ஒழுக்கமாக இருந்தவர் நடிகை சுவலட்சுமி என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தமிழில் அஜித் நடித்த ஆசை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் சுவலட்சுமி. முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு விஜயின் லவ் டுடே படத்தில் நடித்தார்.

அந்த படம் நூறு நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை குவித்தது. கார்த்திக், சரத்குமார், முரளி, பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுவலட்சுமி நடித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டு சுவிட்சர்லாந்தில் சேட்டில் ஆகிவிட்டார்.