பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட தன் நண்பன் பிரதீப்புக்காக வீடியோ வெளியிட்ட யுகேந்திரன்… என்ன சொன்னாரு தெரியுமா..?

By Begam on கார்த்திகை 9, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 40 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்களும், 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் களமிறங்கினர்.

   

இவர்களில் விஜய் வர்மா, அனன்யா, யுகேந்திரன், வினுஷா, அன்னபாரதி உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். பவா செல்லதுரை தானாகவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நிச்சயம் இந்த சீசனின் டஃப் போட்டியாளராக பிரதீப் திகழப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றபடிதான் அவரது கேமும் இருந்தது. ஆனால் அவருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் பிளான் போட்டு கச்சிதமாக அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வைத்து வெளியே அனுப்பி விட்டனர்.

   

 

‘பிரதீப் வெளியேற்றப்பட்டதெல்லாம் நியாயமே இல்லை. கமல் ஹாசன் தீர விசாரித்திருக்க வேண்டும்” என்று ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். அதேபோல் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் விசித்திராவும், அர்ச்சனாவும் பிரதீப்புக்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்க வேண்டும் என தொடர்ந்து சொல்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு, நிக்சன் உள்ளிட்டோர் சண்டையிட்டு வருகின்றனர்.

இப்படி இந்த விவகாரம் இணையத்திலும், பிக் பாஸ் வீட்டிலும் தீயாய் பற்றி எரிந்து வருகிறது.  இந்நிலையில் பிக்பாஸ் 7ல் கலந்துகொண்ட யுகேந்திரன் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரதீப்-க்கு ஆதரவாக பல்வேறு பதிவுகளையும் , வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். தற்பொழுது யுகேந்திரன் பிரதீப்-க்கு dedicate செய்வதாக கூறி ‘ பந்தமென்ன சொந்தமென்ன போனா என்ன வந்தா என்ன’ என்ற நண்பன் உறவை காட்டும் பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…