Categories: சினிமா

வெளியில இருந்து பாத்தா வாரிசு நடிகர்கள்னு சொல்வாங்க… அப்பா எந்த உதவியும் செய்யல… யுகேந்திரனின் போராட்டக் கதை!

Spread the love

மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வாசுதேவன், நடிக்கவேண்டும் என்ற ஆசையில் தமிழ்நாடு வந்து வாய்ப்புகளை தேடியுள்ளார். பொருளாதார பிரச்சனை காரணமாக தன்னுடைய பாஸ்போர்ட்டையே விற்றுவிட்டு திரும்ப மலேசியா செல்ல முடியாமலும் தவித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு எஸ்பிபியின் இசைக்குழுவில் பாடகராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அவர்களோடு இணைந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கச்சேரிகளில் பாடியுள்ளார். அதன் மூலமாகதான் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் பாஸ்கர் ஆகியோரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்படிதான் அவருக்கு பதினாறு வயதினிலே படத்தில் எஸ் பி பி பாடவேண்டிய ஒரு பாடல் அவரால் பாடமுடியாத சூழலில் இவருக்குக் கிடைத்து முன்னணி பாடகர் ஆனார்.

பாடகராக அவர் முன்னணியில் இருந்த போது நடிகராகவும் கலக்கினார். அதன் பின்னர் அவரின் மகனான யுகேந்திரன் பூவெல்லாம் உன்வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகர் ஆனார்.ஆனால் நடிகராக அவரின் கேரியர் நல்விதமாக செல்லவில்லை. இதனால் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆன அவர் இப்போது கோட் படம் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தன்னுடைய சினிமா கேரியர் குறித்துப் பேசியுள்ள அவர் “எங்களை எல்லாம் வாரிசு நடிகர்கள் என்று சொல்லி அமுக்கப் பார்த்தார்கள். ஆனால் நாங்கள் எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளோம் என்பது எங்களுக்குதான் தெரியும். எங்க அப்பா பாடகராக இருந்தாலும் எனக்காக அவர் யாரிடம் சிபாரிசு எல்லாம் செய்யமாட்டார். நான் சிபாரிசு செய்தால் அதன் அருமை உனக்குப் புரியாமல் போய்விடும் என்பார்.

அதனால் நானும் எல்லா ஆஃபிஸும் சென்று போட்டோ கொடுத்துதான் வாய்ப்புப் பெற்றேன். நாட்கணக்கில் காத்திருந்துதான் பூவெல்லாம் உன்வாசம் பட வாய்ப்பைப் பெற்றேன். ஆனால் நான் எதிர்பார்த்தமாதிரி என் சினிமா வாழ்க்கை அமையவில்லை. ஒரு கட்டத்தில் அப்பா இறந்த பிறகு நியுசிலாந்து சென்று செட்டில் ஆகிவிட்டேன். இப்போது கோட் படத்தில் விஜய் கூட 15 ஆண்டுகள் கழித்து நடித்துள்ளேன்” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

விஜய் அலைக்கு இபிஎஸ் வைத்த 365 நாள் செக் பாயிண்ட்… அதிமுகவிலிருந்து விலகியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…

17 seconds ago

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

8 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

13 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

16 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

16 minutes ago

“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…

16 minutes ago