YOUTUBE -ல் புதிய விதி அமல்… இனி இந்த வீடியோக்களுக்கு பணம் கிடைக்காது… அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி செல்போன் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலானோர் youtube சேனல் தொடங்கி அதில் தங்கள் வீட்டு செல்லப் பிராணிகள் முதல் குழந்தைகள் வரை அனைத்து செயல்களையும் வீடியோவாக பதிவிட்டு அதன் மூலமாக வருமான ஈட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் youtube சேனல்களுக்கு புதிய விதிகளை அந்த நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது. ஒரு வீடியோ போலவே மற்றொரு வீடியோவை உருவாக்கக்கூடாது. AI பயன்படுத்திய வீடியோக்களுக்கு பணம் கிடையாது. மிகக் குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் மற்றவர்களின் வீடியோவில் சில திருத்தங்கள் செய்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், டெம்ப்லேட் மாடலில் உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்கு இனி பணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.