“விஜய் தான் முதல்வர்”.. என்னைக்குமே அவங்க கூட மட்டும் கூட்டணி வைக்க மாட்டோம்.. தவெக திட்டவட்டம்…!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை திரைக்குப் பின்னும் முன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதனைப் போலவே தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகின்றது. இந்த முறை ஆட்சி மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். இப்படியான நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, அதைப்பற்றி தற்போது சொல்ல முடியாது, நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டுவர முயற்சிக்கின்றோம் என்று கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றி கழகம் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், மக்களால் வெறுக்கப்படும் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல ஆயிரம் சதவீதம் உறுதியாக உள்ளோம். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் மட்டுமே கூட்டணி. விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.