ஸ்டாலினுக்கு செம ஷாக்… விஜய் கட்சியுடன் கூட்டணி உறுதி… கிரீன் சிக்னல் கொடுத்தாச்சு… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

இதனை சட்டரீதியாக எப்படி கையாளுவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார். அதேசமயம் விஜய்க்கு இந்த விஷயத்தில் ஆதரவாக செயல்பட்டு அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனிடையே கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று தமிழக வெற்றிக்கழகம் கொடியை காண்பித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டார் ஈபிஎஸ்.

   

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகம் கொடிகளை ஏந்திய நபர்கள் இபிஎஸ் வாகனம் முன்பு திரண்டனர். குமாரபாளையத்தில் ஒரு சில இடங்களில் இருந்த தமிழக வெற்றி கழகம் கொடிகள் அதிக அளவில் இருந்தன. இதுவரை தமிழக வெற்றி கழகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்காததால் கூட்டணியை உறுதி செய்தது போல தெரிகிறது. விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ஸ்டாலினுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.