சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், ஓடும் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயிலின் இருக்கை உறைகளை அராஜகமாகப் பிச்சும், காலால் எட்டியும் சேதப்படுத்தும் காட்சிகள் வீடியோவாகப் பதிவாகியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, ‘கண்டெண்ட்’ என்ற பெயரில் அவர்கள் செய்த இந்த பொறுப்பற்ற செயல் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
How stupid one has to be to do this?
See his smile while his friend is tearing the train seat cover apart. They think they achieved something here.
This goes beyond civic sense. This is a punishable offense. pic.twitter.com/t2Sq1MJtpH
— Tarun Gautam (@TARUNspeakss) May 2, 2026
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, “இவர்களை உடனடியாகக் கைது செய்யுங்கள்” என்ற கோரிக்கையுடன் நெட்டிசன்கள் பலரும் இரயில்வே அமைச்சகத்தைக் டேக் செய்து வருகின்றனர். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள், வெறும் ‘லைக்’குகளுக்காகச் செய்யப்படும் இத்தகைய அநாகரீகச் செயல்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதோடு, நாட்டின் சொத்துக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இரயில்வே பாதுகாப்புப் படை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது. வீடியோவில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதள மோகத்தால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதைத் தடுக்கவும், ரயில்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பேணவும் இத்தகைய நபர்களுக்குக் கடுமையான அபராதமும் சிறைத் தண்டனையும் வழங்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
