“நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 41 வயதுப் பெண்ணைச் சீரழித்து… வீடியோ வெளியிட்ட 10 மிருகங்கள்… கர்நாடகாவில் உலுக்கிய பகீர் சம்பவம்…!”

By Swetha on ஆனி 11, 2026

Spread the love

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம், சன்னகிரி தாலுகா பகுதியில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இரவு நேரத்தில் தனியாகப் பெற்றோர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 41 வயதுப் பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் அணுகியுள்ளது. அவரிடம் நட்பாகப் பேசி, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் அப்பெண் மயக்கமடைந்த நிலையில், அவரை ஒரு தனிமையான இடத்திற்குக் கொண்டு சென்று அந்த 10 இளைஞர்களும் அடுத்தடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலைத் தங்களது அலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்த குற்றவாளிகள், இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோவைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றிவிடுவதாக அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஆரம்பத்தில் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவர் பசவபட்டணா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறை, அடுத்த சில மணி நேரங்களிலேயே வழக்குப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட இஷ்ட்ரி நாகராஜ், அர்ஜுனா, பசவந்தா உள்ளிட்ட ஒரு மைனர் சிறுவன் உட்பட 10 பேரையும் அதிரடியாகக் கைது செய்தது. அவர்கள் அனைவரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

   

பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் அரங்கேறும் இதுபோன்ற கொடூரமான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை பொதுவெளியில் அறிவிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்குப் பீதியை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அதற்குச் சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் தேவை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாம் எவ்வளவு சாதனைகள் படைத்தாலும், இன்னும் நாட்டில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத அவலநிலையே நீடிக்கிறது.