“டேய் வேணாம், என் பொண்டாட்டிய விட்டுரு”… மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபர்… ஆபீசுக்கு சென்று கணவன் செய்த கொடூர செயல்….!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

சென்னையை அடுத்த திருவேற்காடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்த டில்லி பாபு என்பவர் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே பாபுவை சந்திக்க அவருடைய கம்பெனிக்கு வந்த இருவர் அவரை வெளியே வரச் சொல்லி பேசி உள்ளனர். அப்போது வினோத் என்பவருக்கும் பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாபுவை சரமாரியாக வெட்டி துளி துடிக்க கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு கம்பெனி ஊழியர்கள் வருவதற்குள் வினோத் தனது நண்பருடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கொலையாளி வினோத் மற்றும் அவருடைய நண்பர் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது வினோத்தின் மனைவி நிவேதாவுடன் பாபுவுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறி உள்ளது.

   

இந்த உறவை நிறுத்துமாறு வினோத் கடுமையாக கண்டித்தும் அதை காதில் வாங்காமல் உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வினோத் தனது நண்பரை அழைத்துக் கொண்டு பாபு வேலை பார்க்கும் கம்பெனியில் வைத்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் தகாத உறவில் இருந்த காதலனை பெண்ணின் கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.