புயல் அலர்ட்… தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

Montha புயல் இன்று இரவு 11 மணிக்குள் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் எதிரொளியாக தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இரவு 7:00 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் தமிழகத்தில் சூறைக்காற்றுடன் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.