“300-ஐத் தாண்டிய பிளட் பிரஷர்” பப்ஜி விளையாடிய போது பயங்கரம்.. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இளைஞர் பலி..!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

மீரட் கைர் நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், தனது வீட்டில் ஹெட்ஃபோன் அணிந்து நீண்ட நேரமாக ஆன்லைன் விளையாட்டான ‘பப்ஜி’ (PUBG) விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கைஃப் உயிரிழந்தார்.

கைஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது ரத்த அழுத்தம் (BP) 300-ஐத் தாண்டியிருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவருக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு இருந்த நிலையில், விளையாட்டில் காட்டிய அதீத ஈடுபாடு மற்றும் பரபரப்பு அவரது ரத்த அழுத்தத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இதன் காரணமாக மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து, கடுமையான உள் ரத்தக்கசிவு (Brain Hemorrhage) ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.