இப்படியா ஆகணும்…? மனைவியை பார்த்து வந்த வாலிபர்…. திருமணமான 5 மாதத்தில் நடந்த பயங்கரம்…. பெரும் சோகம்…!!

By Devi Ramu on கார்த்திகை 9, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு சொகுசு கார் அதிவேகத்தில் சென்றது. அப்போது சாலையோர தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. உடனடியாக கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

அந்த வழியாகச் சென்றவர்கள் இதைக் கண்டு உடனே திருத்துறைப்பூண்டி போலீசுக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுமையாக எரிந்து சாம்பலானது.

   

ஓட்டுநரின் உடல் முற்றிலும் கருகிய நிலையில் போலீசார் மீட்டனர். உடலை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்தில் உயிரிழந்தவர் திருவாரூரைச் சேர்ந்த ரபீக் எனத் தெரியவந்தது. திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன இவருக்கு புதுக்கோட்டையில் மனைவி இருக்கிறார். மனைவியைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.