காலை எழுந்ததும் இந்த 5 தவறை மட்டும் யாரும் செய்யாதீங்க… இதோ உங்களுக்கான இன்றைய டிப்ஸ்…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

உணவு மற்றும் வேலை என மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப நமது உடலை பராமரிப்பது அவசியமாகும். அவ்வகையில் நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யும் ஐந்து விஷயங்கள் உங்கள் நாளை வெகுவாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதன்படி காலை எழுந்ததும் செய்யக்கூடாது ஐந்து விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி காலை எழுந்தவுடன் மொபைல் பார்ப்பது மிகவும் மோசமான பழக்கம். இரவு நன்றாக தூங்கி எழுபவர்கள் கூட காலையில் எழுந்தவுடன் மொபைல் பார்ப்பதன் மூலம் அவர்களின் மூளை மந்தமாகிவிடும்.

காலை உணவில் கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது. புரதச்சத்தும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பெட் காஃபி மிகவும் மோசமான பழக்கம். ஏனென்றால் காபியில் உள்ள அசிட்டிக் தன்மை பற்களில் படிந்து விடும். இதற்குப் பிறகு பல் துலக்கும் போது பற்களின் எனாமல் மோசமடைய கூடும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி குடிக்க கூடாது. காபி உடலில் கார்டிசால் அளவை அதிகப்படுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை மந்தப்படுத்தும். இதனால் அந்த நாள் சோர்வாக மாறிவிடும். சத்து மாத்திரை சாப்பிடுபவர்கள் வெறும் வயிற்றில் மாத்திரை உட்கொள்ளக்கூடாது. குறிப்பாக வைட்டமின் F, A, D, E, K போன்றவை உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ள வேண்டியவை.