திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொதுக் கழிப்பறையில் கல்மந்தை காலனியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்தியதால் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறைக்குச் சென்ற அவர் போதை ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் புழக்கம் அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் சூழலில் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது; ஏற்கனவே கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று நண்பர்களுடன் இணைந்து போதை ஊசி பயன்படுத்திய பெண் ஒருவர் பலியான நிலையில், தற்போது மீண்டும் ஓர் இளைஞர் பலியாகியிருப்பது போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
